அஸ்வெசும தொடர்பில் ஜனவரி இறுதியில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

0
36

இலங்கையில் இந்த ஆண்டிற்கான அஸ்வெசும விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அதிபர் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ” அஸ்வெசும திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இதுவரை எங்களால் 1,410,000 பேருக்கு பணம் செலுத்த முடிந்துள்ளது. அதிக பணவீக்கத்தைக் கொண்டிருந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் அந்தக் கொடுப்பனவுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, எதிர்காலத்தில், அதில் காணப்படும் பலவீனங்களை தவிர்த்து, ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அஸ்வெசுமவிற்காக விண்ணப்பங்களை கோர எதிர்ப்பார்த்துள்ளோம். என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சீர்திருத்த செயல்பாட்டினுள் பாதிக்கப்படும் மக்கள் குழு உள்ளது. குறுகிய காலத்தில் அவர்களை பாதுகாக்கும் வகையில் அஸ்வெசும செயற்படுத்தப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here