நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட ‘மைசா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. இதில் ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் ரவீந்திர புள்ளே இயக்கும் இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கிறது.
கோண்ட் பழங்குடியினரின் சுவாரஸியமான உலகத்தை மையமாகக் கொண்ட ஆக் ஷன் த்ரில்லர் படமான இதில், ராஷ்மிகாவின் தோற்றம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்படத்துக்காக, சாகச நுட்பங்கள் கொண்ட ஆக் ஷன் காட்சிக்கான பயிற்சியை, ராஷ்மிகா மந்தனா தாய்லாந்தில் மேற்கொண்டார். அதன் படப்பிடிப்பு அங்கு நடைபெற்றது.
இந்நிலையில், இப்படத்துக்காக நீருக்கடியில் நடக்கும் ஆக் ஷன் காட்சியைப் படமாக்கியுள்ளனர். 2 நாட்களாக எடுக்கப்பட்ட இந்த சண்டைக் காட்சிக்காக, சுமார் 20 மணி நேரம் நீருக்குள் ராஷ்மிகா இருந்தார். டூப் இல்லாமல் அவரே நடித்தார் என்றும் இந்தக் காட்சிக்காக அவர் சிறப்புப் பயிற்சி எடுத்ததாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.




