பதுளை மாவட்டம் வெலிமடை கல்வி வலயத்திற்கு உட்பட்ட
வோர்விக் அம்பேவெல சரஸ்வதி தமிழ் வித்தியாலத்திற்கு ஆங்கில பாடத்திற்கான ஆசிரியர்களை நியமிக்குமாறு பாடசாலை மாணவர்கள்,பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் நேற்று காலை 8 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
150க்கு மேல் கல்விப்பயிலும் குறித்த பாடசாலையில் கடந்த மூன்று மாத காலமாக ஆங்கில பாட ஆசிரியர் இல்லாமையால் மாணவர்கள் பெரும் பிரச்சனையாக காணப்படுவதாகவும் பரீட்சைகள் வருவதால் ஆங்கில பாடம் கற்பதில் பெரும் அசௌகரியம் ஏற்படுவதாகவே குறித்த போராட்டத்தை இன்று காலை முன்னெடுத்தனர்.
நீலமேகம் பிரசாந்த்