கடந்த பரீட்சை மதிப்பீடுகளின் அடிப்படையில், ஆசிரியர்களுக்கான அனைத்து கொடுப்பனவுகளும் எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் லசிக சமரகோன் தெரிவித்துள்ளார்.
சாதாரண தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான மதிப்பீட்டு கொடுப்பனவுகள் ஆசிரியர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ள நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.இந்த கொடுப்பனவு வழங்கப்படாத காரணத்தால் ஆசிரியர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்திருந்தார்.
இதேவேளை, உயர் தர பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டுக்காக ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் தற்போது குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.