ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படும்போது அந்த அந்த மாவட்டங்களில் வழங்கப்பட வேண்டும்!

0
131

விரைவில் வழங்கப்படவுள்ள ஆசிரியர் நியமனங்கள் தொடர்பில் எழுந்துள்ள சார்ச்சைகளுக்கு தீர்வுகாண்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் குழுவின் உறுப்பினரும் ஐதேகவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,

பட்டதாரிகள் மற்றும் கல்லூரி பயிற்சியை நிறைவுசெய்தவர்களுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் இவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் பிரதேசங்கள் தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. கேகாலையில் உள்ளவர்களுக்கு குருநாகலையில் , புத்தளத்திலும் உள்ளது வேறு மாட்டவங்களிலும் நியமனங்கள் வழங்கப்படுகின்றன. அதேபோன்று இரத்தினபுரி உட்பட மலையக மக்கள் வாழும் ஏனைய மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு ஏனைய மாகாணங்களில் நியமனங்கள் வழங்கப்படுகின்றன.

நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இவ்வாறு நியமனங்கள் வழங்கப்படுவது பொருத்தமற்றது. வெளிமாவட்டங்களில் நியமனங்கள் வழங்கப்படுவதால் அவர்களுக்கு ஏற்படும் செலவுகள் அதிகமாகும். குடும்பங்களையும் பார்க்கவேண்டிய சூழல் உள்ளது.

ஆகவே அவர்களுக்கு அருகாமையில் உள்ள பாடசாலை அல்லது அந்த அந்த மாவட்டங்களில் நியமனம் வழங்கப்பட வேண்டும். இந்த நெருக்கடியான சூழலில் அதுதான் பொருத்தமாக இருக்கும்.

இதுகுறித்து ஜனாதிபதி மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளேன். விரைவில் இதுதொடர்பில் சாதகமான அறிவிப்புகள் வெளியாகுமென நம்புகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here