குறித்த குழந்தையின் வலது கரத்தில் அனைத்து விரல்களிலும் சுற்றியுள்ள சதை முழுவதும் நீங்கி எலும்புகள் வெளியில் தெரியும் அளவிற்கு காயங்கள் இருந்துள்ளன.
அமெரிக்காவில் ஆறு மாத குழந்தையை எலி கடித்து குதறியதில் காயமடைந்த குழந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, குழந்தையின் பெற்றோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் உள்ளது எவான்ஸ்வில் பகுதியில் டேவிட் ஷோனபாம் மற்றும் ஏஞ்சல் ஷோனபாம் தம்பதியினர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்து ஆறு மாதங்களேயான ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு, தனது ஆறு மாத ஆண் குழந்தையின் உடலில் காயங்கள் இருப்பதாக எவான்ஸ்வில் அவசரசேவைக்கு டேவிட் தகவலளித்தார்.இதனையடுத்து அவர்கள் வீட்டிற்கு பொலிஸார் வந்து பார்த்தபோது அக்குழந்தை தலை மற்றும் முகம் உட்பட 50 இடங்களில் காயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறித்த குழந்தையின் வலது கரத்தில் அனைத்து விரல்களிலும் சுற்றியுள்ள சதை முழுவதும் நீங்கி எலும்புகள் வெளியில் தெரியும் அளவிற்கு காயங்கள் இருந்துள்ளன.அக்குழந்தை உடனடியாக நகர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் குழந்தையை எலி கடித்தது தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து குறித்த குழந்தையின் வீட்டை சோதனை செய்த பொலிஸார் வீடு முழவதும் குப்பை கூளங்கள் நிறைந்து எலிகள் நடமாட்டம் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.இதனையடுத்து குழந்தையை வளர்ப்பதில் பொறுப்பற்ற முறையில் இருந்ததற்காகவும் பராமரிக்கும் கடமையில் தவறியதற்காகவும் குறித்த குழந்தையின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.