பொகவந்தலாவ கெம்பியன் கீழ் தோட்டதொழிலாளர்களுக்கு தோட்டத்தில் உள்ள ஆலயத்தில் தோட்ட பொதுமக்களால் ஏற்பட்டு செய்யபட்டள்ள பூஜை வழிபாட்டினை மேற்கொள்வதற்கு அறை நேரம் விடுமுறை வழங்கபடாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கெம்பியன் கீழ்பிரிவு தோட்டமக்கள் 20.04.2018.வெள்ளிகிழமை காலை முதல் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.இன்று காலை தொழிலுக்கு சென்று தோட்ட தலைவர்மார்களால் தோட்ட உதவி முகாமையாளரிடம் இன்றை தினம் தோட்ட ஆலயத்தில் பூஜை ஏற்பாடுகள் இருப்பதானால் அதற்கான அரைநாள் விடுமுறை வழங்கபட வேண்டுமென கோறிய போது தோட்ட தொழிலாளர்களை நாளை முதல் தொழிலுக்கு வரவேண்டாமென தோட்ட உதவி முகாமையாளர் அறிவித்ததாக ஆர்ப்பாடத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர் .
இவ்விடயம் குறித்து மலையக அரசியல் தலைவர்கள் கவனம் செலுத்தி எங்களுக்கான உரிய தீர்வினை பெற்றுதருமாறு கோறிக்கை விடுத்தனர்.
(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்)