இடுப்பில் போத்தலை மறைத்துக்கொண்டு பயணித்த ஒருவர் கீழே விழுந்ததில் கண்ணாடி போத்தல் வயிற்றில் குத்துப்பட்டு பலத்த காயங்களுக்குள்ளான சம்பவம் வெள்ளிக்கிழமை (30) காலை இடம்பெற்றுள்ளது .
எகிரிய கிராமத்தைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
குறித்த நபர் கண்ணாடி போத்தல் ஒன்றை இடுப்பில் மறைத்துக்கொண்டு அவருடைய நண்பரொருவருடன் காட்டுப் பாதையில் பயணித்துள்ளார் அப்போது வழியில் இருந்த பாறையொன்றின் மீது விழுந்துள்ளதுடன் இதன்போது இடுப்பில் இருந்த போத்தல் வெடித்து அதன் ஒரு பகுதி வயிற்றில் குத்துபட்டு காயமடைந்துள்ளார் .
இந்நிலையில் உடனடியாக செயல்பட்ட அவரது நண்பர், வயிற்றில் சிக்கியிருந்த உடைந்த போத்தல் பகுதியை வெளியே இழுத்து, மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் .