இடைவிடாத தாக்குதல்: 34 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் இராணுவம்!

0
35

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வாவில் ராணுவம் மற்றும் போலீசார் அடங்கிய பாதுகாப்பு படையினர் பயங்கரவாத எதிர்ப்பு தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டனர். அப்போது 4 வெவ்வேறு இடங்களில் பயங்கரவாதிகளுடன் நேரடி துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இதில் 26 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

இதேபோல நாட்டின் தென்மேற்கில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் மேலும் 8 பயங்கரவாதிகளையும் பாதுகாப்புப் படையினர் கொன்றனர்.

இது அவர்களின் தொடர்ச்சியான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களை உள்ளடக்கிய இந்த நடவடிக்கைகள், உள்நாட்டு கிளர்ச்சிகளை எதிர்த்துப் போராடுவதில் ராணுவத்தின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுவதாக தகவல்கள் தெரிவிகின்றன.

இந்த தாக்குதலின் விளைவாக ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here