இதுவரை இல்லங்களை ஒப்படைக்காத 14 முன்னாள் அமைச்சர்கள்! வெளியான பெயர் பட்டியல்

0
112

14 முன்னாள் அமைச்சர்கள் தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை இதுவரை வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் நல்லாட்சி அரசாங்கத்தின் போது முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஆர்.சம்பந்தன் மற்றும் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

அத்துடன், வாகன விபத்தில் உயிரிழந்த முன்னாள் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லம் இதுவரை கையளிக்கப்படவில்லை.

முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, முன்னாள் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் ஜனக வக்கம்புர, முன்னாள் போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே, கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி. பி. ஹேரத், முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார்,

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன் டி சில்வா, முன்னாள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, பெருந்தோட்டக் கைத்தொழில் முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன, முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம,

முன்னாள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, முன்னாள் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார மற்றும் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரின் பெயர்களும் இந்தப் பட்டியில் உள்ளது.

பொதுத் தேர்தலுக்கு முன்னர் உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்குமாறு அரசாங்கம் அறிவித்திருந்தது.

அவ்வாறு அறிவிக்கப்பட்ட போதிலும், மேற்குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர்கள் இதுவரை தமது உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here