இத்தாலி பாராளுமன்றத்தில் தாய்பால் கொடுத்த பெண் எம்பி!

0
85

குழந்தை அழுவதை நிறுத்தவில்லை. குழந்தை பசிக்காக அழுகிறது என்பதை அறிந்து கொண்டே கில்டோ அங்கேயே தனது மகனுக்கு பாலுாட்டியுள்ளார்.
இத்தாலி நாட்டின் பாராளுமன்றத்தில் அழுத தன் குழந்தைக்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர் தாய் பால் ஊட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் தற்போது வைரலாகியுள்ளதுடன் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகின்றது.

மேலும், இத்தாலி நாட்டின் பாராளுமன்றத்திற்கு கில்டா ஸ்போர்டெல்லோ(பாராளுமன்ற உறுப்பினர்) கைக்குழந்தையான தனது 1வயது மகனை ஃபெடரிகோவை அழைத்து வந்தார்.

பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, கைக்குழந்தை திடீரென அழுதுள்ளது.

உடனே பாராளுமன்றம் அமைதியான நிலையில், குழந்தை அழுவதை நிறுத்தவேவில்லை. குழந்தை பசிக்காக அழுகிறது என்பதை அறிந்து கொண்டே கில்டோ அங்கேயே தனது மகனுக்கு பாலுாட்டியுள்ளார்.இதை சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தியேதோடு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஃபெடரிகோவுக்கு நீண்ட நீண்ட சுதந்திரமான மற்றும் அமைதியான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். தற்போது நாம் அனைவரும் சற்று அமைதியாக பேச தொடங்குவோம் என சபாநாயகர் ஜார்ஜியோ மியூல் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இத்தாலி நாட்டின் முதல் பெண் பிரதமராக ஜார்ஜியா மெரோனி பதவியேற்றார். அதேசமயம் பெண் எம்பிக்கள் தங்களது கைக்குழந்தைகளை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கான அனுமதி கடந்த நவம்பர் மாதம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here