இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தாயகம் திரும்ப சிறப்பு ஏற்பாடு; மந்திரி உறுதி!

0
18
dailythanthi

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தாயகம் திரும்ப சிறப்பு ஏற்பாடு செய்யப்படும் என மந்திரி உறுதியளித்து உள்ளார்.

இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை அகதிகள் மீண்டும் சொந்த நாடு திரும்புவதற்கு வசதியாக, குடியுரிமை நடைமுறைகளை எளிமையாக்குவது தொடர்பாக இலங்கை அரசு நாடாளுமன்றத்தில் சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக பொதுப்பாதுகாப்பு துறை மந்திரி ஆனந்த விஜேபால கூறுகையில், முறையாக ஆவணங்கள் இன்றி வெளியேறிய அகதிகள், சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை அணுகி பாதுகாப்பு அனுமதி பெற வேண்டும் என்றார்.

சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது

2002-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 18 ஆயிரம் அகதிகள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பினர். எனினும், 1983-க்கு பின் சுமார் 90 ஆயிரம் அகதிகள் இந்தியாவில் வசித்து வருகின்றனர். இந்த சூழலில், ஆகஸ்டு 1, 2006-க்கு முன் வெளியேறியவர்கள், கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இன்றி இருந்தால், தற்காலிக பாஸ்போர்ட்டு மூலம் தாயகம் திரும்ப அனுமதிக்கப்படுவர். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளன.

இதற்கேற்ப அகதிகளுக்கு, அவர்கள் இலங்கை திரும்புவதற்கு தேவையான ஆவணங்களை அனுப்பி அரசு ஆதரவு அளிக்கும் என விஜேபால கூறியுள்ளார்.

இதன்படி, பாதுகாப்பு சோதனைகளை முடித்த பின்னர் தகுதி வாய்ந்த அகதிகள் சொந்த நாட்டுக்கு திருப்பி அழைத்து செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இலங்கை குடியுரிமை சட்டத்தின் கீழ், தற்காலிக பாஸ்போர்ட்டை பயன்படுத்தி, நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட விமான நிலையம் அல்லது துறைமுகத்திற்கு வர அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here