இந்தியா – அவுஸ்திரேலிய அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நாளை ஆரம்பம்

0
40

ICC வெளியிட்ட டெஸ்ட் போட்டி தரவரிசையில் இந்தியா அணி முதலாவது இடத்திலும் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நாளையத்தினம் லண்டனில் உள்ள ஓவல் (The Oval) மைதானத்தில் நடைபெறவுள்ளது .

குறித்த போட்டி இலங்கை நேரப்படி மாலை மூன்று மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.ICC வெளியிட்ட டெஸ்ட் போட்டி தரவரிசையில் இந்தியா அணி முதலாவது இடத்திலும் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும் குறித்த போட்டியில் அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் (Josh Hazlewood) பயிற்சியின் போது ஏற்பட்ட உபாதை காரணமாக போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.

மேலும், ஜோஷ் ஹேசில்வுட்க்கு (Josh Hazlewood) பதிலாக மைக்கேல் நீசேர் (Michael Neser) விளையாடவுள்ளதாகவும் அவுஸ்திரேலிய கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here