இந்திய அணிக்காக தோனி செய்த தியாகம்! அதிசயமாக பாராட்டிய பிரபல வீரர்

0
78

தோனியை போன்ற பலம் வாய்ந்த வீரரை, பேட்டிங் வரிசையில் 7 வதாக பெற்றது இந்திய கிரிக்கெட் அணியின் வரம் – கவுதம் கம்பீர் ஆசியக்கோப்பை 2023 இறுதிபோட்டியில் இலங்கையை வீழ்த்தி 8- வது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது இந்திய அணி.

இந்நிலையில் இந்திய அணியின் வெற்றி குறித்து பேசிய கவுதம் கம்பீர் தோனியைப் பற்றியும் பாராட்டியுள்ளார்.

எப்போதும் தோனியைப் பற்றி முரணான கருத்துக்களை வெளிப்படுத்தி விமர்சிக்கும் கம்பீர் தற்போது தோனியையைப் பாராட்டி பேசியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

அவர் கூறுகையில், போட்டியின் திசையையே மாற்றக்கூடிய திறமை பெற்றிருந்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் துடுப்பாட்ட வீரர் தோனிதான்.அவரைப் போன்ற பலம் வாய்ந்த வீரரை, பேட்டிங் வரிசையில் 7 வதாக பெற்றது இந்திய கிரிக்கெட் அணியின் வரம்.

அணித்தலைவர் பொறுப்பை ஏற்றதால் இந்திய அணி கோப்பைகளை வெல்ல வேண்டும் என்பதற்காவே பேட்டிங் வரிசையில் 6-வது, 7-வது இடத்தில் களமிறங்கி தியாகம் செய்திருக்கிறார் என பாராட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here