இந்திய அணி பயிற்சியாளரக்கு மோடி விண்ணப்பம்?

0
57

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட்டிற்கு பிறகு அவருக்கு பொருத்தமான மாற்றாக யாரை தேர்ந்தெடுக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் கவுன்சிலான பி.சி.சி.ஐ. தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

மே 13 முதல் இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அது திங்கட்கிழமை (27) யுடன் நிறைவு பெற்றது. இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு மோடி, அமித்ஷா, சச்சின், தோனி, சேவாக் ஆகிய பெயரில் போலியாக விண்ணப்பங்கள் குவிந்துள்ளதால் தேர்வுக்குழு குழுப்பம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 3 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் பதிவான விண்ணப்பங்களில் போலி எது, உண்மை எது என கண்டறிய தாமதம் ஆகும் எனவும் பி.சி.சி.ஐ தகவல் தெரிவித்துள்ளது. கூகுள் பார்ம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதால் பலர் போலி விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக்கோப்பை தொடருடன் நிறைவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here