இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. மற்றும் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் எம்.பி. ஆகியோரை நேற்று (11) இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோது, நாட்டின் அரசியல் நிலைவரம் ,முன்னெடுக்கப்பட்டுவரும் இருதரப்பு நடவடிக்கைகள் பற்றிப் பேசப்பட்டது.
இதன் போது, மாகாண சபை தேர்தலை நடத்துவதில் ஏற்படும் தாமதம் குறித்த கரிசனையை முஸ்லிம் காங்கிரஸ் தரப்பு எடுத்துரைத்ததுடன், கிழக்கு மாகாணத்தில் இந்திய நிதியுதவியுடன் மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்பான பொறிமுறையொன்றின் அவசியத்தையும் வலியுறுத்தியது.