இந்திய பவுலர்கள் பதிலடி: 229 ரன்களில் ஆட்டமிழந்தது தென் ஆப்பிரிக்கா!

0
11

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த ரன்களை டிரையல் செய்து வந்த தென்னாப்பிரிக்க அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்துள்ளது.

நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே இழந்த தென் ஆப்பிரிக்க அணி இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தது. இன்றைய நாளில் இந்திய பௌலர்கள் ஆதிக்கம் செலுத்தினர். குறிப்பாக, ஷர்துல் தாக்கூர் அபாரமாகப் பந்து வீசினார். தென் ஆப்பிரிக்க வீரர்களின் 7 விக்கெட்டுகளைச் சாய்த்து புதிய சாதனை படைத்தார் ஷர்துல். எல்கர், பீட்டர்சன், ராசி வான்டர் டூசன், கெய்லே, பவுமா, ஜேன்சன், இங்கிடி என 7 பேரையும் ஷர்துல் தனது திறமையான பந்துவீச்சால் ஆட்டமிழக்கச் செய்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 விக்கெட்டுகளை ஒரே இன்னிங்ஸில் கைப்பற்றிய சாதனையை முதல் முறையாகப் படைத்துள்ளார்.

ஷமியும், பும்ராவும் அவருக்குக் கைகொடுக்க தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியை விட 27 ரன்கள் முன்னிலை பெற்று ஆல் அவுட் ஆனது. தென்னாப்பிரிக்கா தரப்பில் பீட்டர்சன், பவுமா ஆகிய இருவர் அரை சதங்களுக்கு மேல் ரன்கள் எடுத்தனர். தற்போது இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி விளையாடி வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here