விசா அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த நபரொருவர் ஹட்டன் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில், ஹட்டன் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
25 வயதான சந்தேக நபரை, ஹட்டன் நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.