இந்திய மத்திய நெஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தனர்

0
31

ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் லெட்சுமனார் சஞ்சய் மற்றும் கண்டி மாவட்ட பாராளுமன்ற எம்.பி வேலுகுமார் ஆகியோர் இந்திய மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேற்று மாலை சந்தித்துள்ளனர்.

இலங்கை அரசியல் குறித்தும் இந்திய-இலங்கை உறவு குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.இதன்போது இலங்கையில் மலையக பகுதிகள் உட்கட்டமைப்பு வசதிகள்,பாதை அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் கடும் இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டியதற்காக நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.மேலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு விரைவில் மலையக பகுதிகளுக்கு இந்திய அரசாங்கத்தின் ஊடாக பல அபிவிருத்திகளையும்,சுயத்தொழில்,கல்வி,விளையாட்டு உட்பட மலையக இளைஞர் யுவதிகளுக்கு இந்திய அரசாங்கத்தின் ஊடாக சுய வேலைவாய்ப்புகளை பெற்றுத்தருவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here