தமிழர் திருநளான தைப்பொங்கல் விழா ஜனவரி 15-ம் திகதி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்து வீடுகளிலும் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.மேலும் தமிழர்களின் திருநாளை வெளிநாடுகளில் உள்ள தமிழர்களும் கொண்டாட இருகின்றனர்.
இவ்வாறான நிலையில், பொங்கல் வைப்பது எப்படி? பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? என்பதையெல்லாம் மக்கள் தேடிதேடி தெரிந்து கொண்டிருக்கின்றனர்.தமிழகத்தில் பொங்கல் விழாவாக கொண்டாடப்படும் நிலையில், வடமாநிலங்களில் மகரசங்கராந்தி என கொண்டாப்படுகிறது.
இந் நல்ல நாளில் விவசாயத்துக்கு உதவிய சூரிய கடவுளுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் பொருட்டு, விழா எடுத்து தமிழர்களால் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.தமிழ் மாதமான தை மாதம் 1ஆம் நாள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. தை மாத பிறப்பு பொறுத்த வரை சூரியன் தனுசு ராசியில் தனது பயணத்தை முடித்து, மகர ராசியில் பயணிக்க துவங்குதையே தை மாதப் பிறப்பு என்கிறோம்.
இதையே மற்ற மாநிலத்தவர்கள் மகர சங்கராந்தி என்ற பெயரில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடுகிறார்கள். 2023 ம் ஆண்டு பொங்கல் விழா ஜனவரி 15 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது.
ஜனவரி 14 ம் திகதி போகிப் பொங்கல், ஜனவரி 15 ம் திகதி சூரிய பொங்கல், ஜனவரி 16 மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.
பொங்கல் வைக்க நல்ல நேரம் .ஜனவரி 15 திகதி : நல்ல நேரம் – காலை 07.30 மணி முதல் 08.30 வரை.
மாலை 03.30 முதல் 04.30 வரை.கெளரி நல்ல நேரம் – காலை 10.30 முதல் 11.30 வரை.எமகண்டம் – பகல் 12 முதல் 01.30 வரை.ராகு காலம் – மாலை 04.30 முதல் 6 வரை
பொங்கல் வைக்க சரியான நேரம் – காலை 07.45 முதல் 08.45 வரை.வெளிநாடுகளில் இருப்பவர்கள், காலையில் பொங்கல் வைக்க முடியாதவர்கள் பகல் 1.30 முதல் 02.30 வரையிலும், மாலை 03.30 முதல் 04.30 வரையிலும் பொங்கல் வைக்கலாம்.மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம் .ஜனவரி 16 திகதி : காலை 06.30 முதல் 07.30 வரை, மாலை 04.30 முதல் 05.30 வரை