இன்றுடன் முடிவுக்கு வரும் லிட்ரோ தட்டுப்பாடு

0
73

நாடளாவிய ரீதியாக தட்டுப்பாட்டில் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்களை சரி செய்யும் வகையில் இன்று (01) முதல் 100,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.ஆர்டர் செய்யப்பட்ட எரிவாயு கப்பல்கள் நாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், சந்தைக்கு எரிவாயுவை வெளியிடுவது மட்டுப்படுத்தப்பட்டதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார்.

கோரப்பட்ட எரிவாயுக் கப்பல்கள் தற்போது நாட்டை வந்தடைவதால், பண்டிகைக் காலத்தில் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here