இன்று இந்தியாவின் 73வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.

0
116

இந்தியா 1947ல் சுதந்திரம் அடைந்த நிலையில் 1950ல் குடியரசாக அறிவிக்கப்பட்டு இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் ஜனவரி 26ம் தேதி இந்தியாவில் குடியரசுத் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்திய நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றி வைத்தார். பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார்.

இந்திய நாட்டின் 73வது குடியரசு தினமான இன்று டெல்லியில் ராணுவ மற்றும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புகள் நடக்க உள்ளன. குடியரசுத் தினத்தை முன்னிட்டு நாடு முழுக்க பாதுகாப்பு உயர்த்தப்பட்டு உள்ளது. டெல்லியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

குடியரசுத் தினத்தை முன்னிட்டு தேசிய தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை மரியாதை செலுத்தினார். அங்கு இருக்கும் போர் வீரர்களின் நினைவு தூணில் மலைவளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் விஜய் சவுக் பகுதியில் இருந்து ராஜபாதை வழியாக முப்படை அணிவகுப்பு நடக்கும் பகுதிக்கு பிரதமர் மோடி வந்தார்.

கொரோனா பரவலை முன்னிட்டு டெல்லியில் 5000- 8000 அளவிலான மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய நாட்டின் 75வது சுதந்திர தின வருடம் இது என்பதால் ‘ஆசாதி கா அம்ருத் மகோத்சவத்தை’ கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் இந்த முறை பெரிய கலைநிகழ்ச்சிகள், கொண்டாட்டங்களுடன் குடியரசுத் தின விழாக்கள் என இன்று கொண்டாடப்பட உள்ளது.

சுதந்திர இந்தியாவிற்கு இலங்கை மக்கள் சார்பாகவும், ஸ்டார் லங்கா மீடியா நிறுவனம் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here