இன்று இரவு மின்துண்டிப்பு இல்லை

0
112

இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் மின்துண்டிப்பு அமுலாக்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. A,B மற்றும் C முதலான வலயங்களுக்கு மாத்திரம், இன்று பகல் நேரத்தில் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாகும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும், நாளை முதல் மீண்டும் மின்சார துண்டிப்பு நேர அட்டவணையின்படி, அந்தந்த பகுதிகளில் மின்துண்டிப்பு அமுலாகக்கூடும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

எரிபொருள் பற்றாக்குறையால், சில மின்னுற்பத்தி நிலையங்கள் செயலிழந்துள்ளமையால், மின்துண்டிப்பை அமுலாக்க நேரிட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில், டீசல் தாங்கிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

35, 300 மெற்றிக் டன் பெற்றோல் தாங்கிய கப்பலொன்று நேற்று சனிக்கிழமை நாட்டை வந்தடைந்ததாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here