இன்று நாட்டை வந்தடையவுள்ள டீசல் தாங்கிய கப்பல்…..!

0
100

28,300 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பலொன்று, இன்று பிற்பகல் நாட்டை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், நேற்றைய தினம் 37,300 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது.

அந்த டீசலை, இன்றைய தினத்துக்குள் முத்துராஜவளை களஞ்சியத்தில் களஞ்சியப்படுத்த முடியும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, நாட்டில் நிலவும் டீசல் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என அந்த அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், டீசல் இன்மையால் நேற்றைய தினமும் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்னால், நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அத்துடன், பொதுமக்களும், கலன்களுடன் நீண்ட வரிசைகளில் காத்திருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here