இன்று காலை சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பிரதி சபாநாயகர் பதவி தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.பிரதி சபாநாயகர் தொடர்பில் தீர்மானம் எடுக்குமாறு எதிர்க்கட்சி பிரதிநிதிகள் இன்று அழைப்பு விடுத்த போது, முன்னாள் பிரதி சபாநாயகரின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி இதுவரையில் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கவில்லை என சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், இதற்கு எதிர்க்கட்சி பிரதிநிதிகள் ஆட்சேபம் தெரிவித்த போது, அவ்வாறான நிலையில் ஜனாதிபதிக்கு இன்று மாலை வரை கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென சபாநாயகர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதன்படி, பிரதி சபாநாயகர் குறித்த தீர்மானத்தை ஜனாதிபதி இன்று மாலைக்குள் அனுப்பினாலும் இல்லாவிட்டாலும் நாளைய தினம் பாராளுமன்றத்தில் புதிய பிரதி சபாநாயகரை நியமிக்க கட்சி தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.