புத்தாண்டை முன்னிட்டு வெளிமாவட்டங்களுக்கு சென்ற மக்கள் மீள கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்கு திரும்புவதற்காக பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொதுமுகாமையாளர் பண்டுக சுவர்ணஹங்ச தெரிவித்துள்ளார்.
அதன்படி, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 200 மேலதிக பேருந்துகளை இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.