பாகிஸ்தான்,பஞ்சாப் மாகாணத்தில் வசிக்கும் இம்ரான்கானின் மருமகன் ஷாஹ்ரேஸ் கானை லாகூர் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது மற்றும் தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (72) மீது ஊழல், பணமோசடி உள்பட 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுதொடர்பான ஒரு வழக்கில் அவரை குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்தது.
இதனையடுத்து ராவல்பிண்டியில் உள்ள சிறையில் அவர் தண்டனை அனுபவித்து வருகிறார். கடந்த 2023-ம் ஆண்டு மே 9-ந்திகதி பொலிஸார் அவரை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.