இம்ரான் கானைக் கைது செய்ய பாகிஸ்தான் காவல்துறை அதிரடி தாக்குதல்!

0
69

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானைக் கைது செய்வதற்கு அவரது வீட்டின் மீது பாகிஸ்தான் காவல்துறையினர் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் இம்ரான் கானைக் கைது செய்வதற்கு பெருமளவான காவல்துறையினர் களமிறக்கப்பட்டுள்ளதுடன், அவரது இல்லத்தினை சுற்றி கலவரம் வெடித்துள்ளது.

இதனால், அவரது இல்லம் அமைந்துள்ள ஜமான் பூங்கா அருகே தடுப்புகள் அமைக்கப்பட்டு பெருமளவான காவல்துறையினர் குவிக்கப்பட்டு கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத் நீதிமன்றத்தைச் சேர்ந்த பெண் நீதிபதியை மிரட்டிய வழக்கில், இஸ்லாமாபாத்தில் இருக்கும் செஷன்ஸ் நீதிமன்றம் இம்ரான் கானுக்கு பிணையில் வர முடியாத கைது பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here