அடுத்த 2 நாட்களுக்கு பெற்றோல் கிடைக்காது என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.எனவே வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் அவர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.
எனினும், தற்போது நாடு முழுவதும் டீசல் தட்டுப்பாடின்றி விநியோகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.இதேவேளை, இன்றைய தினம் பெற்றோல் விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க பொதுமக்களுக்கு அறியப்படுத்தியுள்ளார்.
எனவே, பெற்றோலுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என பெற்றோலிய கூட்டுத்தாபனமும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.