இவ்வருடம் கடந்த இரண்டு மாதங்களில் 10,664 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார். டெங்கு நோயாளர்கள் நேற்றைய தினம் (01) அறுபது பேர்,பதிவாகியுள்ளதுடன் இவ்வருடம் இதுவரையில் மொத்தமாக 10,724 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
ஜனவரியில் 7,702 பேருக்கும்,பெப்ரவரியில் 2,962 பேருக்கும் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இடைக்கிடை மழை பெய்வதால், எதிர்வரும் வாரங்களில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒருவருக்கு 24 மணி நேரத்திற்கும் மேலாக காய்ச்சல் இருந்தால், மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது அவசியம் என்றும், கொவிட்19, டெங்கு அல்லது பிற வைரஸ் நோய்களால் காய்ச்சல் வரலாம் . கொவிட்19 வைரஸ் பரவுவதால் சிலர் காய்ச்சலுக்கு ஆளாகியிருந்தாலும், சிகிச்சை பெறத் தவறினால் சிக்கல்கள் மற்றும் மரணம் கூட ஏற்படலாம்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், குருநாகல், கண்டி, இரத்தினபுரி போன்ற மாவட்டங்கள் டெங்கு அபாயம் அதிகம் உள்ள மாவட்டங்கள் எனவும் அவர் வாழும் சூழலை நுளம்புகள் பெருகாதவாறு சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.