தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சின் பிரஜா சக்தி அபிவிருத்தி செயல் திட்டமும் சுகாதார அமைச்சும் இணைந்து மலையகப் பகுதிகளில் பல் மற்றும் வாய் வழி சுகாதாரத்தை பேணும் முகமாக மக்களுக்கு தெளிவூட்டல் இலவச மருத்துவ முகாம்களும் நடாத்தப்பட்டு வருகின்றன.
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களினது எண்ணகருவுக்கு அமைய பிரஜாசக்தி அபிவிருத்தி செயல்திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி மற்றும் சுகாதார அமைச்சின் வைத்தியர் நதிஜா அவர்களின் ஏற்பாட்டில் இரத்னபுர மாதம்பை பிரஜாசக்தி நிலையத்தில் இலவச பல் வைத்திய முகாம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இதில் இரத்தினபுரி மாவட்ட வைத்திய பணிப்பாளர் மாதம்பை வைத்தியசாலையின் பல் வைத்தியர் எலியகொட மற்றும் மாதம்பை தோட்ட நலன்புரி உத்தியோகத்தர்கள் பிரஜாசக்தி அதிகாரிகள் இணைந்து நடத்திய இந்த பல் வைத்திய முகாமில் பலர் பங்கு பற்றி இலவச பல் ஆய்வையும் நோய் அறிகுறிகள் காணப்படுபவர்களுக்கான தொடர் சிகிச்சையும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.