களனி திஸ்ஸ அனல்மின் நிலையத்திற்கு 12 நாட்களாக டீசல் கிடைக்கவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
டீசல் வழங்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை என இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் என்ட்ரூ நவமணி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
துல்ஹிரிய மற்றும் மத்துகம மின் உற்பத்தி நிலையங்களும் எரிபொருள் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சப்புகஸ்கந்த அனல்மின் நிலையத்திலும் மேலும் 2 நாட்களுக்கு மாத்திரமே எரிபொருள் இருப்பதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், மின்சார நெருக்கடி ஏற்படும் எனவும், மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதால், மின்வெட்டுக்கு செல்ல வேண்டிய நிலை வரலாம் என, எண்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.
இன்றைக்கு (14) பிறகு ஏற்படும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மின்வெட்டை மேற்கொள்வதா இல்லையா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.