எரிபொருட்களின் விலைகள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் மீளவும் உயர்வடையும் சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு நிதி அமைச்சின் அனுமதியை கோரியுள்ளது.
நிதி அமைச்சின் அதிகாரபூர்வ அனுமதி கிடைக்கப் பெற்றதும் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரத்தில் லங்கா ஐ.ஓ.சீ நிறுவனம் எரிபொருட்களின் விலைகளை உயர்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த மாதம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 6.8 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.