இறந்த தொழிலாளர்களை நினைவுகூர்ந்து தோட்ட நிர்வாகம் அஞ்சலி.

0
50

நீண்ட காலமாக தேயிலை தோட்டத்தில் சேவையாற்றி அத்தோட்டத்தில் உயிர்நீத்த தோட்டத்தொழிலாளர்களையும் நினைவு கூர்ந்து அவர்களை கௌரவிக்கும் வகையில் அஞ்சலி நிகழ்வு ஒன்றினை அக்கரபத்தனை தனியார் தோட்டமான அயோனா தோட்டம் நேற்று (11) முன்னெடுத்திருந்தது.
குறித்த தோட்டத்தில் 60 குடும்பங்களை சேர்ந்த 200 பேர் வாழ்ந்து வருகின்றனர். இதில் அனேகமானவர் தோட்டத்தில் தொழில் செய்து வருகின்றனர்.
தோட்ட நிர்வாகம் இங்கு தொழில் புரியும் தொழிலாளர்களின் மேம்பாட்டுக்காக பல்வேறுபட்ட நலன் சார்ந்த விடையங்களை செய்து வருகிறது.

இத்தோட்டம் தனியாருக்கு சொந்தமாக இருந்தாலும் தேயிலை பராமரிப்பை மிகவும் நேர்த்தியாக செய்து வருகின்ற தோட்டமாகும்.அத்தோடு தோட்டத்தில் தொழில் செய்தாலும் தொழிலாளர்கள் மதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு. தோட்டத்தில் தொழில் செய்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் இறந்தவர்களை நினைவு கூர்ந்து அவர்களை கௌரப்படுத்தும் நிகழ்வு இத்தோட்ட நிர்வாக உயர் அதிகாரிகளின் வழிகாட்டலுக்கு அமைவாக தோட்ட முகாமையாளர் கௌசல்யா உந்துகொட தலைமையில் நிகழ்வு 11 அன்று இடம் பெற்றது.
நிகழ்வில் இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது .

அதனைத் தொடர்ந்து தோட்டத்தில் தொழில் செய்து ஓய்வு பெற்றவர்களுக்கு உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மேற்பார்வை செய்யும் கங்காணி மார்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கி தொழிலாளர்களை கௌரவப்படுத்தியமை விசேட அம்சமாகும் .

இந்நிகழ்வில் தோட்ட அதிகாரிகள் லிகிதர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here