இலங்கைக்கு இனி எரிபொருள் இல்லை ~கைவிரித்த இந்தியா..?

இலங்கை முற்பணம் செலுத்தினால் மாத்திரமே இனி இந்தியா எரிபொருள் வழங்கும் என்று நம்பதகு வட்டாரங்களில் இருந்து செய்தி கசிந்துள்ளது.

இலங்கைக்கு வழங்கிய கடன்கள் முடிவடைந்த நிலையில் இனி முற்பணம் இல்லாமல் இந்தியா எரிபொருளை விநியோகிக்காது என்று கூறப்படுகிறது.

இலங்கையிடம் டொலர்கள் முடிவடைந்த நிலையில் வர இருந்த கப்பலை தாமத படுத்த சொன்னதாக பெயர் குறிப்பிட முடியாத அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

இனி இலங்கை பணம் செலுத்தினால் மட்டுமே இந்தியாவிடம் இருந்து எரிபொருள் விநியோகம் என்பது உறுதி.