இந்தோனேசியாவின் வடக்கு சுமாத்ரா தீவில் 6.6 மெக்னிடியுட் அளவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டிருந்தது. இதனை அடுத்து சுனாமி அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது இலங்கைக்கு சுனாமி அபாயம் நீங்கியுள்ளதாக இலங்கையின் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.
எனவே இலங்கையின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அஞ்ச வேண்டியதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.