‘இலங்கைக்கு செல்வதாக இருந்தால் பயணக் காப்புறுதியை உறுதிப்படுத்துங்கள்’

0
30

பிரித்தானிய அரசாங்கம் தனது பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளதுடன், இலங்கைக்கு பயணிக்கும் பட்சத்தில் பயணக் காப்புறுதியைப் பெறுவது முன்னெப்போதையும் விட முக்கியமானது என்றும் அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு இருக்கிறதா என்பதை அவர்கள் சரிபார்க்க வேண்டும் என்றும் குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மின்வெட்டு, மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவசர அம்பியுலன்ஸ் சேவைகள், பொது போக்குவரத்து வசதிகள், அவசர சேவைகள் மற்றும் வைத்தியசாலைகள் போன்றவற்றுக்கு பாதிப்பு ஏற்படுமெனவும் புதுப்பிக்கப்பட்ட பயணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார நெருக்கடி குறுகிய அறிவிப்பில் ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் மற்றும் வன்முறை அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என்பதால், குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பிரித்தானிய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here