இன்று வியாழக்கிழமை கல்கிசை, பொரலஸ்கமுவ, கொட்டாவ, போப்பே, மஸ்கெலியா, குருதலாவ மற்றும் வெதிகும்புர ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.13 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக ஏப்ரல் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாட்டின் மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமத்திய மாகாணங்களிலும், அம்பாறை, குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீ்ற்றருக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது