ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமாரிற்கும், தமிழக திராவிட முன்னேற்ற கழகத்தின் முதன்மைச் செய்தி தொடர்பாளர் கே.எஸ்.இராதாகிருஸ்ணனிற்கும் இடையில் நட்பு ரீதியிலான சந்திப்பொன்று இன்று (27) இடம்பெற்றது.
கொழும்பில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழக திராவிட முன்னேற்ற கழகத்தின் முதன்மைச் செய்தி தொடர்பாளர் கே.எஸ்.இராதாகிருஸ்ணனை, எஸ்.ஆனந்தகுமார் நட்பு ரீதியில் சந்தித்து கௌரவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து, இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் குறித்து, இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் தொடர்பில் எஸ்.ஆனந்தகுமார், தமிழக திராவிட முன்னேற்ற கழகத்தின் முதன்மைச் செய்தி தொடர்பாளர் கே.எஸ்.இராதாகிருஸ்ணிற்கு விளக்கமளித்துள்ளார்.
இந்த சந்திப்பில், எஸ்.ஆனந்தகுமாருடன், இலங்கை இந்திய தொடர்பாளர் மனவை அசோகனும் கலந்துக்கொண்டிருந்தார்.