இலங்கைப் பெண்ணின் சடலம் துருக்கியில் புதைக்கப்பட்டது

0
78

பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்த இலங்கையர் துருக்கியில் உள்ள ஹடாய்/அன்டாக்யாவில் (Hatay/Antakya) புதைக்கப்பட்டார் என வெளிவிவகார அமைச்சு நேற்று (14) உறுதிப்படுத்தியுள்ளது.

அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் 16 இலங்கையர்களின் நலனைக் கண்டறிவதற்காக, துரருக்கி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றது.

அவர்களில் 15 பேர் பத்திரமாக இருப்பதாகவும், அவர்களிடம் தூதரகத்தால் தொடர்பு கொள்ளப்பட்டது, அதே நேரத்தில் துருக்கியில் உள்ள ஹடாய்/அன்டக்யா மாகாணத்தில் வசித்து வந்த இலங்கைப் பெண் ஒருவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து காணாமல் போன இலங்கையரான பெண் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கு இணங் இறந்தவரின் உடல் ஹடாய்/அன்டக்யாவில் அடக்கம் செய்யப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here