இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்…! மகிந்தவின் ஆஸ்தான சோதிடர் வெளியிட்ட தகவல்

0
26

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நியமிக்கப்படுவார் என ராஜபக்ச குடும்பத்தின் ஜோதிடரும் முன்னாள் அரச ஜோதிடருமான சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.சஜித் நிச்சயம் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவார். கஜகேசரி எனும் சக்தி வாய்ந்த ராஜயோகம் அவரது ஜாதகத்தில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த முறை தேர்தல் ஒன்று வைத்திருந்தால் 8வது ஜனாதிபதியும் சஜித் பிரேமதாஸவே செயற்பட்டிருப்பார். எனினும் தேர்தல் வைக்காமல் இருந்தமையினால் சஜித்தினால் ஜனாதிபதியாக முடியவில்லை.

எனினும் நாட்டின் 9வது ஜனாதிபதி சஜித் பதிவி ஏற்பதற்கு அனைத்து பலன்களும் உள்ளது. இதனால் என்னால் உறுதியாக கூற முடியும் இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக சஜித் நியமிக்கப்படுவார்.

அவரது வெற்றியை தடுக்க முடியாது. கடந்த தேர்தலில் சஜித் தோல்வியடைந்தார். அதற்கான நான்கு பேர் தற்கொலை செய்துக் கொண்டனர்.

தந்தை ரணசிங்க பிரேமதாஸவை போன்று சஜித் நாட்டை ஆழ்வார் என ஜோதிடர் சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here