தொழுநோய் ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை சான்றிதழ் பெற்றுள்ள போதிலும், கடந்த வருடமும் 1,325 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் வருடாந்தம் சுமார் 2,000 தொழுநோயாளர்கள் பதிவாவதாக தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.
பதிவாகியுள்ள நோயாளிகளில் 10 வீதமானவர்கள் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் எனவும் வைத்தியர் தெரிவித்தார். அவர்களில் 40 வீதமானவர்கள் மேல் மாகாணத்திலும் 50 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்திலும் பதிவாகியுள்ளதாக பிரசாத் ரணவீர தெரிவித்தார்.
உடலில் தோலின் நிறத்தை விட சந்தேகத்திற்கிடமான புள்ளிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை தோல் நோய் மருத்துவ மனைக்கு சென்று பரிசோதிக்க வேண்டும் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தனி மைய தொழுநோய் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.