இலங்கையில் எதிர்த்து கதைத்த மனைவியை இரும்புகம்பியால் ஒரே போடு போட்ட கணவன்..!

0
101

குடும்ப வன்முறையால் கணவனால் , மனைவி இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கொஸ்வத்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நேற்று (23) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொஸ்வத்த,மஹயயவத்த பகுதியில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிடைக்கபெற்ற தகவல்கலையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 38 வயதுடைய கஹடவில, பொதுவடவன பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். தனிப்பட்ட தகராறு காரணமாக குறித்த பெண்ணின் கணவர் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் 47 வயதுடைய குறித்த சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here