இலங்கையில் தேங்காயின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தற்போது பெரிய தேங்காய் ஒன்று 150 ரூபாவிற்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, பெரிய அளவு கொண்ட தேங்காய் ஒன்று 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன், சிறிய அளவு கொண்ட தேங்காய் 100 ரூபாவிற்கும், நடுத்தர அளவினை உடைய தேங்காய் 175 முதல் 200 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரியவருகிறது.
இந்த நிலையில் முழுத் தேங்காய் கொள்வனவு செய்ய முடியாத வாடிக்கையாளர்களுக்காக சில கடைகளில் உடைத்த தேங்காய் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.