கடந்த 23ஆம் திகதி, தெரிவு செய்யப்பட்ட 305 வகையான பொருட்களை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக தடை செய்வதற்கு நிதியமைச்சு நடவடிக்கை எடுத்தது.குறித்த தடை நேற்று முதல் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என இறக்குமதி – ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், கடந்த 23 ஆம் திகதி முதல் ஏற்றுமதி செய்யப்பட்ட, செப்டம்பர் 14 க்கு முன்னர் நாட்டை வந்தடையவுள்ள பொருட்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது.
மேலும் கட்டுப்படுத்தப்படும் பொருட்களில் பால், கிரீம்கள், வெண்ணெய், பூக்கள், ஓட்ஸ், சொக்லேட், பழங்கள், பியர், வாசனை திரவியங்கள், அழகுசாதனப் பொருட்கள், ஷாம்புகள், கைப்பைகள், பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தைத்த ஆடைகள், கத்திகள், கத்தரிக்கோல், குளிரூட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், தொலைபேசிகள் மற்றும் பாகங்கள் ஆகியவை அடங்கும்.
இதேவேளை, அண்மையில் விதிக்கப்பட்ட இந்த இறக்குமதிக் கட்டுப்பாடுகளில் கையடக்கத் தொலைபேசி பற்றரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் கையடக்கத் தொலைபேசி பற்றரிகளின் விலையும் அதிகரிக்கும் என கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், தற்போது கையடக்கத் தொலைபேசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றின் விலைகளும் வேகமாக அதிகரித்துள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.