இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி : உயிரை மாய்க்க முயன்ற தம்பதியினர்!

0
23

மனைவியின் சுகவீனத்திற்காக அதிக பணம் செலவழிக்க வேண்டியிருந்ததாலும் அதற்கு போதிய பண வசதி இல்லாததாலும் கணவன் மனைவிக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று சூரியவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பதிவாகியுள்ளது.

சூரியவெவ வெனிவெலர பிரதேசத்தில் வசிக்கும் 58 வயது மற்றும் 54 வயதுடைய கணவன் மனைவி இருவருமே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

54 வயதான மனைவி முதுகுத்தண்டில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக நீண்ட நாட்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது நோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக கணவனால் அதிக பணம் செலவிட வேண்டியேற்பட்டுள்ளது.

இந்நிலையில் அதற்கான போதிய வருமானம் இல்லாத நிலையில், தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

விஷம் குடித்து வீட்டில் ஆபத்தான நிலையில் இருந்த கணவன் மனைவியை அயலவர்கள் சிகிச்சைக்காக சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளனர்.

குறித்த பெண் நீண்டகாலமாக நோயினால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்கான சிகிச்சையை பெற்றுக்கொள்ளும் பொருளாதார நிலைமை தம்பதியருக்கு இல்லாததால் தம்பதியினர் கடும் விரக்தியில் இருந்ததாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுர சுசந்தவின் பணிப்புரையின் பேரில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here