உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரதான பொதுக்கூட்டங்களை நடத்த சிறி லங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. அதன்படி அக்கட்சியின் தலைவர் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் முதலாவது பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
நாளை மொனராகலை நகரில் பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறி லங்கா பொதுஜன பெரமுனவினால் இந்த வருட மே தினக் கூட்டம் ஏற்பாடு செய்யப்படுவது குறித்தும் கட்சித் தலைவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.