இலங்கையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு

0
31

நாட்டில் தொடர்ந்து எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.கடந்த இரு தினங்களுக்கு முன்னர் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை லிட்ரோ நிறுவனம் அதிகரித்திருந்தது.

இந்நிலையில் நாடு முழுவதும் லிட்ரோ சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

லிட்ரோ எரிவாயு சிலிண்டர் பெறுவதற்கு பல நாட்கள் அலைய வேண்டியுள்ளதாகவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

லிட்ரோ சமையல் எரிவாயு விற்பனை முகவர்கள் தினமும் கையிருப்பு பெற்றாலும் கையிருப்பு போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ளனர்.

இதனால் மீண்டும் வரிசையில் காத்திருந்து லிட்ரோ சமையல் எரிவாயுவை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர்.பாணந்துறை, கட்டுநாயக்க, மஹர, பத்தரமுல்லை போன்ற பல பிரதேசங்களில் போதியளவு கையிருப்பு கிடைப்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சில பகுதிகளில் சில நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே கையிருப்பு கிடைப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here