இலங்கையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு திருமலையில்…

0
91

தமிழ் மக்களின் பாரம்பரியத்தையும் வீரத்தையும் பறைசாற்றும் ஜல்லிக்கட்டை இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஆரம்பித்துவைத்தார்.

இன்று 6ஆம் திகதி மற்றும் 7,8ஆம் திகதிகளில் திருகோணமலையில் நடைபெறும் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடைபெறுகின்றன.

உலக நாடுகளில் தமிழ்நாட்டை தாண்டி வேறு ஒரு நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.Oruvan

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மலேசியா பாராளுமன்ற உறுப்பினர் டட்டுக் ஶ்ரீ முருகன் , சிறப்பு விருந்தினர்களாக ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்க தலைவர் ஒண்டிராஜ், செயலாளர் ராஜா ஆகியோர் கலந்துகொண்டதுடன், இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்த விசேட அழைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்துடன் இணைந்து ஜல்லிக்கட்டு ஏற்பாடு செய்யப்பட்டது. திருகோணமலையில் உள்ள போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here