அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வலுவாக இருந்தாலும், இறக்குமதி செய்யப்படும் டயர்களின் விலையை 5 வீதத்தினாலேயே குறைக்க முடியும் என ரயர் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொள்வனவு செய்த டயர்கள் சந்தையில் இருக்கின்றமையே இதற்கு காரணம் என அதன் தலைவர் சுனில் பொன்சேகா தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், புதிய கையிருப்புகளைப் பெற்ற பின்னர், அடுத்த மூன்று மாதங்களுக்குள் இறக்குமதி செய்யப்படும் டயர்களின் விலை சுமார் 15 வீதத்தினால் குறைக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த சில நாட்களாக அமரிக்க டொலரின் பெறுமதி நாளுக்கு நாள் குறைவடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.